பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருப்பூர் அருங்கேரிபாளையம் அருகே கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா,35, இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடினமான வேலை செய்ய கூடாது என குடும்பத்தினர் கூறி வந்தனர். ரேணுகாவின் தங்கை பசுபதியும், அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடினமான வேலைகளை செய்துள்ளார். இதை கண்ட தங்கை பசுபதி, ரேணுகாவை திட்டியதுடன், மாமாவுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

இதனால், அய்யப்பன், ஏன் கடின வேலை செய்கிறார் என பேசியுள்ளார். இதனால் விரக்கதியடைந்த ரேணுகா, தன் தங்கைக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரேணுகா தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு போயம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!