/* */

திருப்பூர்: தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக் கோரி திருப்பூரில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூர்: தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, திருப்பூரில் முன்னாள் சபாநாயகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் வாக்குறுதிகளாக, பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும், குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும், அங்கன்வாடி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது.

இவற்றில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மற்ற வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியான அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக.,சார்பில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அவ்வகையில், ந்திருப்பூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்