தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு
X

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மீன் வாங்காமல் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீன்வரத்து மிகவும் குறைந்து விட்டது.வார நாட்களில் தினசரி 40 டன் மீன்களும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் 60 டன் வரையும் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் ஆந்திராவில் இருந்து வளர்ப்பு மீன்கள் என்று மொத்தம் 40 டன் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில் கடல் மீன்களான மத்தி ரூ.280 முதல் 300க்கும், நெத்திலி, அயிலை ரூ.350 முதல் 400க்கும் வஞ்சிரம் சிறியது ரூ.600 முதல் 900-க்கும், பாறை ரூ.350 முதல் 400க்கும், வளர்ப்பு மீன்களான கட்லா ரூ.180-க்கும், லோகு ரூ.170-க்கும், அணைப்பாறை ரூ.180-க்கும், சிலேபி ரூ.150 விற்பனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மீன் மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. விடுமுறை நாளான இன்று காலை மீன் வாங்க ஏராளமான பொது மக்கள் வந்தனர். பொது மக்களுக்கு அனுமதி மறுப்பால், திரும்பி சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil