திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு
X

தாராபுரம் அரசு பள்ளியில் இறைவணக்கம் பாடும் மாணவிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 அரசு, தனியார் பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 9,10 மற்றும்11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூரில் 400 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 அரசு, தனியார் பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாணவர்களுக்கும் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்விதுறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!