திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
X

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி.

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவியை போலீஸார் ஆய்வு செய்தனர்.

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை, 45. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர், குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்து, கேவிஆர் நகரில் வாடகை வீட்டில் வசித்து, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு பணியாற்றும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட பிரச்சனையால் மன வேதனையடைந்த தெய்வானை கேவிபி நகர் பகுதியில் பட்டப்பகலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி., காட்சியை வைத்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!