திருப்பூர் எம்எல்ஏ., கையை வெட்ட போதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபர்

திருப்பூர் எம்எல்ஏ., கையை வெட்ட போதாக  பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபர்
X

எம் எல் ஏ கையை வெட்டப்போவதாக பதாகையுடன் வந்த நபர்.

திருப்பூர் எம்எல்ஏ., கை வெட்டபோதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபரால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாககுமார். 48. இவர், வேலுச்சாமி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் நாககுமார் வீட்டில் திருட்டுப்போனது. இந்த திருட்டு குறித்து பெருமாநல்லூர் போலீஸில் புகார் செய்து இருந்தார். புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளர் மீது பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தார்.

இதற்கிடையில், வடக்கு தொகுதி எம்எல்ஏ., பிரச்சனையில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பெருமாநல்லூர் போலீஸார் நாககுமாரை அழைத்து, வழக்கை வாபஸ் பெற்றால், திருட்டுப்போன பொருட்களை மீட்டு தருவதாக தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக கடந்த செப்.,30 ம் தேதி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் பொருட்கள் திருப்பி தரவில்லை. மீண்டும் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த நாககுமார், பிரச்சனைக்கு காரணமான வடக்கு எம்எல்ஏ., விஜயகுமாரின் கையை வெட்டப்போதாக பதாகை ஏந்தியவாக கலெக்டர் ஆபீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை அழைத்து சென்று, விசாரிக்கின்றனர். இதற்கிடையில், கொடுத்த பணம், நகைகளை மோசடி செய்து விட்டாக மற்றொரு நபர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்