திருப்பூரில் பாஜக வேட்பாளர் முடி திருத்தி வாக்கு சேகரிப்பு

திருப்பூரில் பாஜக வேட்பாளர் முடி திருத்தி  வாக்கு சேகரிப்பு
X

முடிதிருத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் மாநகராட்சி 30வது வார்டு பாஜக வேட்பாளர்

திருப்பூரில் 30வது வார்டில் போட்டியிடும் டு பாஜக வேட்பாளர் முடி திருத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்து உள்ளன. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் 690 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு பிப்.19ம் தேதி நடப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 30வது வார்டில் பாஜக., சார்பில் களமிறங்கியுள்ள அஜிதா, வார்டு வாரியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முடி திருத்தம் கடைக்கு சென்ற வேட்பாளர் அஜிதா, அங்கிருந்த குழந்தை ஒருவருக்கு முடி திருத்தம் செய்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!