பல்லடம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'

பல்லடம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குவா குவா
X

ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள். உடனிருப்பவர் ஓட்டுனர் வல்லரசு.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பெண்ணுக்கு, 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ரம்யா (27), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புவன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரம்யாவை, திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அல்லலாபுரம் அருகே வந்த போது, ரம்யாவிற்கு பிரசவவலி அதிகமாக ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஆம்புலன்சில் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து தாயும்,சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பணியாற்றிய மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள் மற்றும் டிரைவர் வல்லரசு ஆகியோரை, பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!