பல்லடம் கோழிப்பண்ணைகளில் ரூ.2 கோடி கறிக்கோழி தேக்கம்

பல்லடம் கோழிப்பண்ணைகளில்    ரூ.2 கோடி கறிக்கோழி தேக்கம்
X
பல்லடம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் ரூ.2 கோடி மதிப்பிலான கறிக்கோழிக்கள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பணிகள் உள்ளன. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி கேராளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி 20 லட்சம் கிலோ கறி கோழிகள் இறைச்சிக்காக வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்லடம் சுற்று வட்டாரப்பகுதியில் 2 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள், பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளன.

இது குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது: கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கால் கோழிப்பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மீண்டு, பண்ணைகள் செயல்பட துவங்கி உள்ளன. இந்நிலையில் 2வது அலை பரவலால் மீண்டும் கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கோழித்தீவனம் வருகை நின்றது. தற்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் கோழிக்கறி விற்பனை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 கோடி மதிப்பிலான கோழிகள் பண்ணையில் தேக்கம் அடைந்து உள்ளதாக, அவர்கள் கூறினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!