திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  ஆலோசனை கூட்டம்
X

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்கள் படித்தார். ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஓடாநிலை, சங்ககிரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.பல்லடம், பொங்கலூர் ஒன்றிய, நகர கிளைகளில் பல்லடத்தில் படம் வைத்து மலரஞ்சலி செலுத்த வேண்டும்.

பிஏபி பாசன வாய்க்காலை விரிவுப்படுத்த வேண்டும். ஆனைமலை, மலையாறு, நல்லாறு திட்டத்தை விரைவாக துவங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் சுப்பிரமணியம், இளைஞரணி நாகராஜ், மகளிர் அணி விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture