திருப்பூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.13.50 கோடிக்கு மது விற்பனை

திருப்பூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.13.50  கோடிக்கு மது விற்பனை
X
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளில் ரூ.13.50 கோடி மது விற்பனையாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம் தொட்ட மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் ஒன்றாக இருந்தது. இதனால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.

இதனிடையே, தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்த ஊரடங்கு தளர்வில், மேற்கு மண்டல மாவட்டங்களில், டாஸ்மாக் கடை திறக்க அனுமதி தரப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

வழக்கமாகவே, திருப்பூர் மாவட்டத்தில் தினசரி மதுவிற்பனை விற்பனை 15 கோடி ரூபாய் வரை இருந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் 9 கோடி ரூபாயும், நேற்று 4.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, சராசரியை விட குறைவு என்று, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!