100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை
X

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் 118 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலை பொறுத்தவரையில் மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பாஜக இந்த முறை அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கொடுத்ததில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது. 100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என தெரிவித்தார்.

சமீபத்தில் பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவருக்கு ஆதரவாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா