/* */

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் வருகைக்காக தயார் நிலையில் பள்ளிகள்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல், தொடக்கப்பள்ளி திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் வருகைக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் வருகைக்காக தயார் நிலையில் பள்ளிகள்
X

திருப்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தடுப்பூசி பயனாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும் நவ.,1 ம் தேதி நாளை முதல் 1 ம் வகுப்புமுதல் 8 ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் மாணவர்கள் வருகையை ஒட்டி, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 4 மாவட்ட கல்வி அலுவலர், 14 வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகள் கண்காணிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பள்ளியில் கிருமி நாசினி மருந்து தெளித்தல், தேவையற்ற மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல், பழுதான கட்டிடங்களை அப்புறப்படுத்தக் கூடாது என பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 31 Oct 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்