உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை:அதிமுக மகளிரணி நிர்வாகி விலகல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை:அதிமுக மகளிரணி நிர்வாகி விலகல்
X
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக நகர மகளிர் அணி செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்

காங்கயம் நகராட்சியில் கடந்த 2001 ல் இருந்து 2006 வரையில் 14 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் விமலா அண்ணாதுரை. கடந்த 2001ல் சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றிப்பெற்று அதிமுக., வில் இணைந்தார். இவர், காங்கயம் நகர மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 2011ல் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் நடப்பு தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 10 வது வார்டில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விமலா அண்ணாதுரை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மேலும், 10 வார்டில் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.


Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!