வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
X

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம்.

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வெள்ளகோவில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அக்டோபர் 2-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூடுமிடம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய அனைத்து பகுதி களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத் தப்பட்டு வருகின்றன. சட்ட விழிப்புணர்வு வாகனமும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், காங்கேயம் வட்ட சட்ட பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் என். கார்த்திகேயன், பி. வாசுதேவன், எம். ஷாஜகான் மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், ராஜ், ராஜமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!