காங்கேயம் அருகே கட்டிடத்தொழிலாளி கொலை

காங்கேயம் அருகே கட்டிடத்தொழிலாளி கொலை
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

காங்கேயம் அருகே முத்தூர் ரோடு, கணேஷ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்,42, கட்டிட வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காங்கேயம் போலீஸில் அவரது மனைவி புகார் செய்தார்.

இந்நிலையில், வெள்ளகோவில் முத்தூர் பிரிவு அருகே மீன் விற்பனை கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காங்கேயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு காங்கேயம் போலீஸார் சென்று விசாரித்தனர். மோப்ப நாய் சென்று மோப்பம் பிடித்தது.

விசாரணையில், அங்கு கொலை செய்யப்பட்டு இருந்தவர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. எதற்காக கொலை செய்யப்பட்டார், குடிப்பழக்கம் உள்ளதால், குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture