காங்கயத்தில் பெண் கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு

காங்கயத்தில் பெண்  கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு
X

காங்கயம் அருகே உடலை வைத்து சாக்கடையில் வீசப்பட்ட சூட்கேஸ்.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோடு பொல்லிகாலிபாளையத்தில் சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சூட்கேைஸ திறந்து பார்த்தனர்.

அதில், 25 வயது மதிக்கத்தக்க, நைட்டி அணிந்தவாறு அடையாளம் தெரியாத பெண் சடலம் இருந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண் கொலை செய்து, இங்கு வீசப்பட்டாரா என்பதும் குறித்தும், இறந்து கிடந்த பெண் யார் என்பது குறித்தும், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்