காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்
X
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் இன்று தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ எடையுள்ள 15 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு வந்தது.

அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.20.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.19.20 க்கும், சராசரியாக ரூ.20 க்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதேபோல், 3 ஆயிரத்து 393 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ரூ.101 க்கும், குறைந்தபட்சமாக ரூ.80 க்கும், சராசரியாக ரூ.100 க்கும் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 897 க்கு விற்பனையானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!