பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை
X

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

Suicide News -காங்கயத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Suicide News -திருப்பூர் மாவட்டம், காங்கயம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் நசீர் (வயது 32). இவரது மனைவி அஷ்ரப் நிஷா (28). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 7 மாதங்களாக குடும்பம் நடத்திய நிலையில், அஷ்ரப் நிஷாவிடம் வரதட்சனை கேட்டு கணவரும், அவரது மாமியார் மும்தாஜ் பேகமும் (59) கொடுமைப்படுத்தினர். கடந்த 7-4-2015 அன்று, அவர்கள் இருவரும் அஷ்ரப் நிஷாவிடம் சண்டையிட்டுள்ளனர். இதனால் அன்று இரவு, அஷ்ரப் நிஷா தூக்கு போட்டு இறந்தார்‌. இது குறித்து தகவல் அறிந்த அஷ்ரப் நிஷாவின் தந்தை அப்துல் ரகுமான், காங்கயம் போலீசில் புகார் அளித்தார். புகாரில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அசரப் நிஷா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நசீர், மும்தாஜ் பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று, குற்றம் சாட்டப்பட்ட நசீர், மும்தாஜ் பேகம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!