காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை
X

காங்கயம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடிகள்.

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள அழகானபுரத்தை சேர்ந்தவர் கந்தப்பழம்,48. இவர், தற்போது காங்கேயம் படியூர், சிவகிரிபுதூரில் வசிக்கிறார். இவர், பிரபல பீடி நிறுவனத்தின் பீடிகளை போன்று போலியாக பீடிகளையும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடைகளுக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது. தகவல் அறிந்த காங்கேயம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 212 போலி பீடி பண்டல்கள், 367 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.27 ஆயிரத்து 300 மற்றும் டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!