திருப்பூரில் 12 ம் தேதி மொபைல் தடுப்பூசி முகாம் விவரம்

திருப்பூரில் 12 ம் தேதி நடைபெற உள்ள மொபைல் தடுப்பூசி முகாம் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 அலைகளிலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்களை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுக்கும் வகையில் முதல் அமைச்சரின் அறிவுரைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்.12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மொபைல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அவிநாசி, திருப்பூர், பொங்கலூர், கணியூர், உடுமலை, கூடமங்கலம், பல்லடம், குன்னத்தூர், தாராபுரம், குண்டடம், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர், திருப்பூர் மாநகராட்சி ஆகிய வட்டாரங்களில் தலா 450 தடுப்பூசி வீதம் 6450 தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!