காங்கேயம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

காங்கேயம் அருகே  அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு
X

பைல் படம்.

65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காங்கேயம் அருகே பகவாதிபாளையம் பிரிவு உள்ளது. அங்கு 65 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், இறந்து கிடந்தவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவரை பற்றியோ அல்லது இவருடைய உறவினர்கள் பற்றியோ தகவல்தெறிந்தால் காங்கேயம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவும். தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 04257 - 230641. மேலும் இறந்த முதியவரின் சடலம் காங்கேயம் அரசுமருத்துவமணையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!