அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி பிஏபி., விவசாயிகள் நூதன போராட்டம்
பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள்.
பிஏபி., பாசனத்திற்கு முறையாக தண்ணீர் விடக்கோரி, பிஏபி., பாசன விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை நீரவள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர், அரசு கூடுதல் செயலாளர், திருப்பூர் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பரம்பிக்குளம், ஆழியாறு பிஏபி பாசன திட்டத்தில், எங்கள் பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2 ஆண்டுக்கு ஒரு முறை பாசனத்தில் தண்ணீர் வரும். அதன் மூலம் விவசாய பணிகள் நடக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக பிஏபி., பாசனத்தில் முறைகேடான பாசன நீர் விநியோகம் செய்யப்படுவதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசிடம் இருந்து பெறப்படும் அரசாணைக்கு மாறாக நீர் விநியோகம் செய்கிறார்கள்.
காண்டூர் கால்வாய் புனரமைப்பு செய்யப்பட்ட தவறான கட்டுமானத்தால் பாசனத்திற்கு வர வேண்டிய நீர் உபரியாக பிஏபி.,. தொகுப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் இருபுறமும் 300 மீட்டர் தூரத்துக்குள் உள்ள கிணறுகளில் இருந்து பாசன காலங்களில் பிஏபி அதிகாரிகள் உதவியுடன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. லைனிங் செய்யப்படாத கீழ்பவானி திட்டத்தில் 35 சதவீத நீர் இழப்பில் செயலாக்கம் செய்யப்படும் நிலையில், லைனிங் செய்யப்பட்ட பிஏபி திட்டத்தில் 100 சதவீத நீர் இழப்பு செயலாக்கம் செய்யப்படுகிறது. நீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இதை வலியுறுத்தி மனு அனுப்பப்படுகிறது, என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu