அவிநாசியில் செல்போன் கடையில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அவிநாசியில் செல்போன் கடையில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அலுவலகம் எதிரே, பகீம் ரகுமான் என்பவர் செல்போன் கடை வைத்து உள்ளார். இவரது கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்த 2 மர்ம நபர்கள், கடைக்குள் புகுந்தனர்.

கடையில் இருந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இந்த காட்சிகள், கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!