விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த அனுமதிக்கலாமே: விசைத்தறியாளர்கள் கோரிக்கை

விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த   அனுமதிக்கலாமே: விசைத்தறியாளர்கள் கோரிக்கை
X
விசைத்தறிக்கான மின் கட்டணத்தை பிரித்துத் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள், அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு தாமாக முன்வந்து இயங்கவில்லை. இதனால், விசைத்தறி உரிமையாளர்களின் பொருளாதாரமும் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், விசைத்தறிக்கூடங்களில் மின் கணக்கீடு செய்து, வரும் 15ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் தற்போது விசைத்தறி கூடங்கள் இயக்க முடியாத சூழ்நிலையில், நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகளை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு முன் விற்கப்பட்ட துணிகளுக்கு முழுமையாக இன்னும் தொகை வந்து சேரவில்லை. 50 சதவீத விசைத்தறி உரிமையாளர்கள் கூலி அடிப்படையில் நெசவு செய்து வருவதாலும், அவர்களுக்கு சரியாக கூலி கொடுக்க முடியாமல் உள்ளனர். மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

எனவே, கடந்த ஏப்ரல், மே மாத விசைத்தறி உரிமையாளர்களுக்கு உண்டான மின் கட்டணத்தை, வரும் 3 பில்களில் சரியாக பிரித்து கணக்கிட்டு எவ்வித அபராதம் இன்றி செலுத்த, ஆணை பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story
highest paying ai jobs