மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்
X

மாவட்ட ஆட்சியர் வினீத்.

திருப்பூர் மாவட்டத்தில் செப்., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் செப்.,4 ம் தேதி (இன்று) ஊத்துக்குளி தாலுகா உடுமலை மற்றும் மடத்துக்குளத்திலும், 6 ம் தேதி அவிநாசியில், 7 ம் தேதி பல்லடத்தில், 8 ம் தேதி தாராபுரத்திலும் நடைபெறுகிறது.

மத்திய அரசின் தனித்துவ தேசிய அடையாள அட்டை அடிப்படையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். தேசிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags

Next Story
ai solutions for small business