திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 1000 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பொது வழியையும் அடைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நிலையில் திருப்பத்தூரில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்க கூடாது என்று எச்சரித்தும் தடையை மீறி கடையை திறந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட துணி கடை, பாத்திரக்கடை, பர்னிச்சர் கடை டிவி ஷோரூம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சார் ஆட்சியர் வந்தனா கர்க் சீல் வைத்தார். இதனை அறிந்து அவசர அவசரமாக மூடிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu