ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
X

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபானம் கடத்தி வந்த பெங்களூரை சேர்ந்த பிரபு மற்றும் வேலூரை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 மதுபாட்டில்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து பின்னர் மது அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்...

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!