10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு :  ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்
X
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று ஜோலார்பேட்டை பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நல்லதம்பி, ஜோலார்பேட்டையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.தேவராஜ், வாணியம்பாடியில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முகமது நயீம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.சி. வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல, தமிழர்களின் தன்மானத்தை காக்கவும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும்,மொழி, கலாச்சாரம், மற்றும் தமிழ் மண் ஆகியவற்றை காப்பதற்காக நடக்கின்ற தேர்தல்.மத்திய அரசு முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது அதனை ஆதரித்து பாராளுமன்றத்தில் அதிமுக வாக்களித்து. அதிமுக வாக்கு அளிக்க வில்லை என்றால் அந்தச் சட்டம் நிறைவேறிய இருக்காது.

இதன் மூலம் சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். ஆனால் அ தி மு கவும் பாமகவும் தான் ,குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது இதன் காரணமாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என கூறியுள்ளது.இது சிறுபான்மை இன மக்களை ஏமாற்றும் செயல்.

குறிப்பாக நாடு முழுவதும் இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு துன்பம் ஏற்படக் காரணமாக இருந்தது அதிமுகவும், பாமகவும் தான் என ஸ்டாலின் கூறினார். சிறுபான்மையின மக்களுக்கு திமுக என்றும் துணையாக இருக்கும். திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறுபான்மை நலன் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ,மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறுபான்மையினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

திமுக ஆட்சி அமைத்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வேலை வழங்கப்படும். இந்தியைத் திணித்து நாட்டைப் பிளவுபடுத்த பாஜக முயல்கிறது அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!