/* */

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது. வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, மான் கொம்புகள் பறிமுதல்

HIGHLIGHTS

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது
X

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடியதாக  கைது செய்யப்பட்டவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கம்பி கொல்லை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இளைஞர் ஒருவர் காவல்துறையினரை பார்த்து தப்பி ஓடியுள்ளார். அவரை விரட்டி சென்று பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே உள்ள பலாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பதும் ஆம்பூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருந்துள்ளதும் தெரியவந்தது

பின்னர் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 மான்கொம்புகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது! செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 19 May 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?