ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்

ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
X

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. அதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகை மொத்த வியாபார கடையில் நவீத் என்பவர் கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து வருவாய் துறைக்கு புகார் வந்தன.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடிய கடைகளை கண்டறிந்தால் உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்