ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை : வீட்டுக்கு சீல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை : வீட்டுக்கு  சீல்
X

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஊரடங்கு விதி மீறி இறைச்சி விற்பனை செய்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்து வந்த வீட்டுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்து வந்த வீட்டுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதில் இறைச்சி கடை மற்றும் மீன் கடைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்த நிலையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் தொடர்ந்து சில இடங்களில் மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்து வந்தனர். அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி துறை சார்பில் அதிகாரிகளுடன் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலகேம் 6-வது தெருவில் நவீத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்து வருவதாக ஆம்பூர் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆம்பூர் நகர கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் நகர காவல் ஆய்வாளர் திருமால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டில் நவீத் என்பவர் இறைச்சி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து இறைச்சியை கைப்பற்றி ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்கப்பட்டதாக அந்த வீட்டுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இதேபோன்று அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூரில் வீட்டில் இறைச்சி கடை நடத்தி வந்த வீட்டிற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!