ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
X

ஆம்பூர் ரோடில் தீப்பற்றி எரியும் கார். 

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த காரை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் பெங்களூரிலிருந்து ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதிக்கு சக்தி பிரியன் என்பவர் தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள கடைக்கு குளிர்பானம் வாங்குவதற்காக வந்தபோது திடீரென காரின் முன்பக்கம் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக காரிலிருந்து இறங்கி உள்ளார். பின்னர் கார் திடீரென தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியது.


அங்கு இருந்த பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா