ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
X

ஆம்பூரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஜமில் அகமது

ஆம்பூர் அருகே இனிப்பு வாங்க கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் சேர்ந்தவர் ஜமில் அகமது (வயது 22) இவர் ஆம்பூர் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இறைச்சி கடைக்கு அருகில் 7 வயது சிறுமி மாலை நேரத்தில் தின்பண்டம் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்பொழுது கடையில் விடுவதாக கூறி சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜமில் அகமது என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!