ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கணவர் கொலை வழக்கு: கஞ்சா வியாபாரி கைது
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த 22 ஆம் தேதி மாலை பெரியகொம்பேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோனா இவர் கணவர் கோவிந்தராஜ் ( 40) இவர் தேசிய நெடுஞ்சாலை அருகே எலக்ட்ரானிக்ஸ் எல்.ஈ.டி டிவி சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இவரை மர்ம நபர்கள் குத்தி கொலை செய்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியது போலீசார் விசாரணை தெரியவந்தது
இந்நிலையில் கொலைக்குற்றாவாளியை ஆம்பூர் காவல் துணை கணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை வாணியம்பாடி - ஆம்பூர் செல்லும் பேருந்தில் வெங்கடேசன் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் குறிப்பிட்ட பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் வெங்கடேசன் பேருந்தில் இருப்பது தெரியவந்தது , உடனடியாக அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை அறிந்த கோவிந்தராஜின் உறவினர்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சோபனா, மற்றும் உறவினர்கள் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அவருக்கு தண்டனை வாங்கித் தருவதாகக் கூறி அனுப்பி வைத்தனர்
கைதான கஞ்சா வியாபாரி வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன் எனக்கு நன்னடத்தை சான்றிதழ் வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டதாகவும் அப்பொழுது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இருந்து கடிதம் வாங்கி வந்தால் உனக்கு வழங்கப்படும் என கூறி அனுப்பியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கேட்டதாகவும் தற்பொழுது நான் இதுபோன்ற சான்றிதழ் வழங்கினால் நாளை காவல்துறையிடம் நான் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும் எனக் கூறியதால் ஆத்திரமடைந்து மதுபோதையில் இருந்த நான் குத்திக் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை குத்திக் கொலை செய்த கஞ்சா வியாபாரி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu