ஆம்பூர் பிரியாணி கடையை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

ஆம்பூர் பிரியாணி கடையை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்
X
ஆம்பூர் தனியார் ஓட்டலில் சிக்கன் சேமியா பிரை கிடைக்காத ஆத்திரத்தில் பிரியாணி கடை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரயில் நிலையம் முன்பாக அமைந்துள்ள பிரபல தனியார் பிரியாணி கடை ஒன்றில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபு மற்றும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் தயாளன் ஆகியோர் பிரியாணி கடைக்கு சென்று சிக்கன் ப்ரை சேமியா கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கடையின் உரிமையாளர் அது மாலையில் போடப்படும் சிற்றுண்டி மாலை நேரத்தில் தான் கிடைக்கும் தற்போது பிரியாணி மட்டுமே உள்ளது. வேண்டும் என்றால் பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

தனக்கு இப்போதுதான் வேண்டும் எனக்கூறி கடை உரிமையாளர் முகமது சர்தார் மற்றும் சாலிஹ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபு மற்றும் தயாளன், வாக்குவாதம் முற்றி ஹோட்டல் உரிமையாளர்களை தாக்கியுள்ளனர். அதன்பின்னர் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

பிரியாணி கடையில் இருந்த பொருட்கள் உடைத்து சேதப்படுத்தினர். பிரியாணி கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன

ஆம்பூரில் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!