ஆம்பூரில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவில் இணைந்தார்
பாமக - அதிமுக - திமுக தமிழருவி
ஆம்பூரில் அதிமுகவில் சீட்டு வழங்கப்பட்ட நபர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவத்தால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் தமிழருவி (வயது 50) இவர் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே ஆம்பூர் பாமகவில் நகர தலைவராக இருந்துள்ளார்.
அக்கட்சியிலிருந்து விலகி நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் இணைந்துள்ளார். அவரது விருப்பப்படி அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவித்தபோது நிலையில் அதில் இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 14-வது வார்டு போட்டியிடுவதற்கு தமிழ் அருவிக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென திமுக நகர செயலாளர் ஆறுமுகத்தை நேரில் சந்தித்த தமிழருவி அவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
அதிமுக சார்பில் சீட்டு வழங்கப்பட்ட நிலையில் தமிழருவி திமுகவில் இணைந்ததால் திமுகவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழருவி எதற்காக இப்படி திடீர் முடிவு எடுத்தார் என்பது அவரது ஆதரவாளர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் அதிமுகவில் சீட் வழங்கப்பட்டுள்ள தமிழருவி அவருக்கு எதிர்த்து போட்டியிடக்கூடிய 14 வது வார்டில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக நகரச் செயலாளர் ஆறுமுகத்திடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu