பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தல் 4 பேர் கைது

பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தல்  4 பேர் கைது
X

ஆம்பூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி பாலாறு மற்றும் அதனை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் தொடர்ந்து மணல் கடத்தி வருவதாக வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆலாங்குப்பம் பாலாற்று பகுதியிலிருந்து பெரியாங்குப்பம் நோக்கி மணல் கடத்திச் சென்ற 4 மாட்டு வண்டிகளை பிடித்து விசாரணை செய்ததில் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, ராஜேஷ்குமரன் மற்றும் ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் என்பருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் என தெரிய வந்தது .மேலும் தொடர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில் 4 பேரை வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் 4 பேரை கைது செய் யப்பட்டு வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings