திருநெல்வேலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்க

திருநெல்வேலி:   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்க
X

பைல் படம்

சட்ட விரோத செயல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக 213 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப் படைகள் மூலம் நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்கை. எடுத்தார்.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே இருவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அவர்களில் 87 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு ள்ளனர். 126 பேர் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது..

Tags

Next Story
ai powered agriculture