நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி

நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி
X

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி.

நெல்லை நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நான்காவது நாள் திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி சுவாமி சன்னதி பின்புறம் அமைந்துள்ள ஸ்தலத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக முழுதும் கண்ட ராம கோன் வெள்ளி கலையத்துடன் அரன்மனைக்கு பால் எடுத்து செல்லும் நிகழ்வும், கால் இடறி மூங்கில் முகட்டில் பால்கொட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து முழுதும் கண்ட ராமபாண்டியன் அனுமதியுடன் மூங்கில் முகட்டை வெட்டும் போது ரத்தம் பீரிடும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அரண்மனைக்கு பால் கொண்டு சென்ற முழுதும் கண்ட ராம கோன் மற்றும் முழுதும் கண்ட ராம பாண்டிய மன்னுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வேணு வனத்தில் உருவான சுவாமி நெல்லையப்பருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil