வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
X

வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகா அரோகரா கோஷங்களுடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக பெரிய குடைவரைக் கோவிலாக வள்ளியூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை தேர் திருவிழா சிறப்புக்குரியதாகும். கடந்த ஆண்டுகளாக கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்றதாலும் கொரோனா தாக்கத்தினாலும் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடந்த கார்த்திகை மாதம் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்த வருடம் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினம்தோறும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடந்தது. 9ம் திருநாளான நேற்று திருத்தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி நேற்று காலை சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பகல் 10.15க்கு பக்தர்கள் வடம் பிடித்து அரோகரா கோஷத்துடன் இழுத்தனர்.

நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக கோடையை தணிக்க நீர்மோர் குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டன. ஆங்காங்கே அன்னதானமும் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்