திசையன்விளையில் பொறியாளர்கள் தினவிழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திசையன்விளையில் பொறியாளர்கள் தினவிழா:  நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

திசையன்விளையில் பொறியாளர்கள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திசையன்விளையில் பொறியாளர்கள் தினவிழாவில் ஏழை, எளியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடந்த பொறியாளர்கள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திசையன்விளையில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர்கள் தின விழா சங்க தலைவர் பொறியாளர் பி.டி.ஆனந்தராஜ் தலைமையில் நடந்தன. கூட்டத்திற்கு செயலாளர் பொறியாளர் சுயம்புகேசன் தீபக் முன்னிலை வகித்தார். செயல் உறுப்பினர் பொறியாளர் சாம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், சிறப்பு அழைப்பாளர்களாக திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர். டி.செல்வராஜ், காமராஜர் நற்பணி இயக்க தலைவர் எஸ்.ஜி. ராஜன், அரசு வழக்கறிஞர் பழனிசங்கர், நகர தே.மு.தி.க. செயலாளர் நடேஷ் அரவிந்தன், முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் நாமதுரை, அய்யா ஏஜன்சீஸ் ஜெயகோபால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், ஏழை பெண்களுக்கு சேலைகள், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, மாற்றுதிறனாளிக்கு நிதி உதவி வழங்கி பேசினார். விழா முடிவில் பொறியாளர் ஆபிரகாம் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai healthcare products