/* */

நம்பியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைப்பு

பாசனத்திற்காக நம்பியார் அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு. இதன் மூலம் 8 கிராமங்களில் 40 குளங்கள் பயன்பெறுகின்றன.

HIGHLIGHTS

நம்பியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைப்பு
X

வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை சட்டபேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை சட்டபேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோட்டைகருங்குளத்தில் நம்பியாறு அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் தற்போது இந்த அணையின் கொள்ளவு முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த அணையை சட்டபேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.

இதன் மூலம் குளங்கள் நம்பியாறு அணை மூலம் கோட்டைக்கருங்குளம், உறுமன்குளம், ரமதாபுரம், கரைச்சுத்துபுதூர், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், முதுமொத்தான்மொழி, திசையன்விளை ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த 40 குளங்கள் தண்ணீர் பெறுகின்றன. அணை நேரடி பாசனத்தில் 375¼ ஏக்கரும், மறைமுக பாசனத்தில் கோட்டை கருங்குளம், துத்தி குளம், கன்னகங்குளம், புதுக்குறிச்சிகுளம், ஆய்முடிகுளம், கொல்வாய்குளம், பாலாத்திகுளம், பாப்பான் குளம், குட்டிநாகன்குளம், பெருங்கண்ணன்குளம், சித்தாலன்குளம், பெரியாலன்குளம், கைலாசப்பேரிகுளம், பொன்னாத்திகுளம், நம்பிக்குறிச்சிகுளம், பூதனேரிகுளம், தருவைக்குளம், செந்திலான்பண்ணைகுளம், பசுவிழிகுளம், பெட்டைக்குளம், நந்தன்குளம், எருமைக்குளம், அவக்காய்குளம், குமாரபுரம்குளம், வண்ணான்குளம், பிள்ளையார்குளம், அப்புவிளைக்குளம், கீழப்படுகைகுளம், ஸ்ரீகிருஷ்ணபேரிகுளம், தினகரன்குளம், இஸ்லாபுரம்குளம், ரம்மாதாபுரம் குளம், புளிமான்குளம், தத்துவனேரிகுளம், பீலிக்குளம், புலிக்குளம், பெருங்குளம், சிறுகுளம், உறுமன்குளம், விளிமான்குளம் ஆகிய 40 குளங்கள் வாயிலாக 1,369¼ ஏக்கரும் என மொத்தம் 1,744½ ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். வினாடிக்கு 60 கனஅடி திறப்பு அணையில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 28–ந்தேதி வரை திறக்கப்படுகிறது. அணை வலது மதகு மூலம் வினாடிக்கு 30கனஅடி வீதமும், இடது மதகு மூலம் வினாடிக்கு 30 கனஅடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 60கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும்.

Updated On: 29 Nov 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!