வள்ளியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைப்பு

வள்ளியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைப்பு
X
வள்ளியூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலையில் இன்று (06.03.2022) திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய நலனில் அக்கறை கொண்டு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது முன்னால் முதலமைச்சர் கலைஞர். பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கான நடப்பு பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி, வடக்கு காருகுறிச்சி, வீரவநல்லூர், வடக்கு கல்லிடைக்குறிச்சி, கீழ அம்பாசமுத்திரம், களக்குடி, பள்ளமடை, குன்னத்தூர், கீழ காடுவெட்டி, திருக்குறுங்குடி, மூன்றடைப்பு, அழகியபாண்டியபுரம், தென்கலம், நாரணம்மாள்புரம், வெள்ளக்கோவில், கீழநத்தம், அரியக்குளம், கீழபாட்டம், முன்னீர்பள்ளம், மேலச்செவல், வெள்ளாங்குழி, பிரம்மதேசம், சாட்டபத்து, அயன்சிங்கம்பட்டி, மன்னார்கோவில், பள்ளக்கால்பொதுக்குடி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, ஊர்க்காடு, வள்ளியூர், திசையன்விளை, மானூர் ஆகிய பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து நெல்லினை விற்பனை செய்து கொள்ள ஏதுவாக நேரடியாகவே அல்லது இ. சேவை மையம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் மூலமாகவோ ஆன்லைன்-ல் பதிவு செய்து பயனடைந்து கொள்ளலாம்.

கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2021-2022-ல் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு நெல்கிரேடு ஏ.ரகம் குறைந்தபட்ச ரூ.1960 மற்றும் ஊக்கத்தொகை ரூ.100 ஆக மொத்தம் ரூ.2060 ஆகவும், நெல் பொது ரகம் குறைந்தபட்ச ரூ.1940 மற்றும் ஊக்கத்தொகை ரூ.75 ஆக மொத்தம் ரூ.2015 ஆகவும், அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நெல் கொள்முதல் பருவங்களில் திருநெல்வேலி மண்டலத்தில் 2018-19 ஆம் ஆண்டில் 50000 மெ.டன் நெல்லும், 2019-20 ஆம் ஆண்டில் 58000 மெ.டன் நெல்லும், 2020-21 ஆம் ஆண்டில் 95000 மெ.டன் நெல்லும், மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் கார் பருவத்தில் 20000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் நடப்பு பிசானப் பருவத்தில் 80000 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ECS முறையில் வரவு வைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் முனைவர்.வி.செந்தில்குமார், இணை இயக்குநர் வேளாண்மை இரா.கஜேந்திர பாண்டியன், வடக்கு வள்ளியூர் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் ரா.ராதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் (தரகட்டுப்பாட்டு) முனைவர் வி.ஜி.மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி, ஜான்சிரூபா, வள்ளியூர் ஒன்றிய உறுப்பினர் மல்லிகாஅருண், மாவட்ட விவசாயி அணி செயலாளர் மாடசாமி, நேரடி நெல்கொள்முதல் நிலைய திட்ட அலுவலர்கள் காசிநாதன், ஜோசப் பெல்சி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil