உவரியில் தீயணைப்பு துறையினரின் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

உவரியில் தீயணைப்பு துறையினரின் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
X

உவரியில் தீயணைப்பு துறை சார்பில் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திசையன்விளை தீயணைப்பு நிலையம் சார்பில் உவரியில் பொதுமக்களுக்கு பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

உவரியில் தீயணைப்பு துறை சார்பில் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து உவரியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்தியகுமார் உத்தரவின்படி, உதவி மாவட்ட அலுவலர் செ.சுரேஷ் ஆனந்த் மேற்பார்வையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பருவ கால விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி சுயம்புலிங்கசுவாமி கோவில் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் எவ்வாறு அணுகுவது மற்றும் இடி, மின்னல்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது மற்றும் மின்சார விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை திசையன்விளை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர்கள் செய்து காண்பித்தார்கள். பொதுமக்கள் இந்த பயனுள்ள பயிற்சி கண்டு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture