கூடன்குளம் அருகே தேவாலய திருவிழாவையாெட்டி பாய்மர படகு போட்டி

கூடன்குளம் அருகே தேவாலய திருவிழாவையாெட்டி பாய்மர படகு போட்டி
X

கூட்டப்புளி புனித சூசையப்பர் தேவாலய 3 ம் நாள் திருவிழாவினையொட்டி பாய் மர படகு போட்டி நடந்தது.

கூட்டப்புளி புனித சூசையப்பர் தேவாலய 3 ம் நாள் திருவிழாவினையொட்டி பாய்மர படகு போட்டி நடந்தது.

கூடன்குளம் அருகிலுள்ள கூட்டப்புளி புனித சூசையப்பர் தேவாலய 3 ம் நாள் திருவிழாவினை யொட்டி வெண் லில்லி குழுவினர் சார்பில் பகுதி வாலிபர்கள் கலந்து கொண்ட பாய்மர படகு போட்டி நடந்தது.

கூடன்குளம் அருகிலுள்ள கூட்டப்புளியில் புகழ்பெற்ற புனித சூசையப்பர். தேவாலயத்தின் திருவிழாவை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த 3 ம் திருவிழாவினையொட்டி கூட்டப்புளி வெண் லில்லி குழுவினர் சார்பில் நடந்த பாய்மர படகு போட்டி நடந்தது.

கூட்டப்புளி முதல் தோமையார்புரம் வரை கடலில் சென்று விட்டு மீண்டும் கூட்டப்புளி வரை சுமார் 24 நாட்டிக்கல் தூரத்தினை பாய்மர படகில் வாலிபர்கள் கடந்து சென்று பரிசுகளை வென்றனர்.

சுமார் 7 மணி நேரம் நடந்த பாய் மர படகு போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 75000/- த்தை லியோ மரிய செல்வம் படகு குழுவினரும் 2 வது பரிசாக. ரூபாய் 40000/- த்தை ரூபர்ட் சிலுவை படகு குழுவினரும், 3 வது பரிசாக ரூபாய் 25000/- த்தை மஜோன் ராஜ் படகு குழுவினரும் வென்றனர்.

மாலை 5 மணிக்கு முடிவடைந்த படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டப்புளி பங்குத்தந்தை ரஞ்சித்குமார் காடேசர் ரொக்க பணத்தினை வழங்கினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது