தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கல்
X

பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்து நடைபெற்றது இதில் நகை கடன் தள்ளுபடி பெற்ற 32 பயனாளர்களுக்கு தமிழக சபாநாயகரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு வழங்கினார்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 32 பேருக்கு ரூ 15 லட்சம் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை சபாநாயகர் அப்பாவு வழங்கல்

தமிழக முதல்வர் அறிவித்த கூட்டுறவு நகைகடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகை வழங்கும் விழா நெல்லை மாவட்டம் பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்து நடைபெற்றது இதில் நகை கடன் தள்ளுபடி பெற்ற 32 பயனாளர்களுக்கு தமிழக சபாநாயகரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு வழங்கினார் .இதில் 5பவுண் உட்பட்ட நகைகளுக்கான ரூ 15இலட்சம் மதிப்பிலான நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதில் முதல்கட்டமாக தேர்வான 32 பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ், நகைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார் பின்னர் அவர் பேசும்போது.

தமிழகம்முழுவதும் கூட்டுறவு துறை சார்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஐந்து பவுனுக்கு கீழே தங்க நகைகள் வைத்து கடன் பெற்றவர்களுக்கு தமிழக அரசு தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம் பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் முதல் கட்டமாக 32 பேருக்கு 14.64 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பழவூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிக்காக 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பழவூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் தாலுகாவில் 360 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 352 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டு காலத்திற்குள் அந்த பணிகள் நிறைவடையும் போது வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாக்கப்படும். சிதம்பராபுரம், யாக்கோபுரம், இருக்கன்துறை, அடங்கார்குளம், ஆவரைகுளம், பழவூர் பஞ்சாயத்து பகுதிகளில் மக்களுக்கு குடிநீருக்காக பொய்கை அணையில் இருந்து 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்க ஆய்வு நடைபெற்று வருகிறது.

பழவூரில் நூலகக் கட்டடம் கட்டுவதற்காக நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.. ராதாபுரம் கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தாமரைகுளம் அருகே மிஷின் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து மின் நீரேற்றும் மூலம் ராதாபுரம் கால்வாயில் கொண்டு வருவதற்கு திட்டத்திற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்து பொதுப்பணித் துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. ராதாபுரம் தொகுதியில் பொதுமக்களின் வசதிக்காக 44 கிளை ரேஷன் கடைகள் அமைக்க கூட்டுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்வில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் ராஜா, கூட்டுறவு இணை பதிவாளர் சுபாஷினி, மண்டல இணைப்பதிவாளர் அழகிரி மாவட்ட பஞ்உறுப்பினர் ஆவரை குளம் பாஸ்கர், கிராம நல முன்னேற்ற சங்க தலைவர் பழவூர் இசக்கியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகா அருள், பாண்டித்துரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமிகுமார் ஒன்றிய செயலாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai marketing future