வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே அதிவேக ரயில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையிலான இரட்டை ரயில் பாதை அதிவேக ரயில் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது,
நெல்லை மாவட்டத்தில் இரட்டை இரயில்வே பாதை அமைக்கப்பட்டு வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையிலான அதிவேக ரயில் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது,
மதுரையிலிருந்து நாகர்கோவில் வரையிலான மார்க்கத்தில் மின்மயமாக்கலுடன் இரட்டை ரயில்வே பாதையின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்ததையடுத்து வள்ளியூரிலிருந்து, ஆரல்வாய்மொழி வரை பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் வள்ளியூர் ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று ஆரல்வாய்மொழி முதல் வள்ளியூர் வரையிலான ரயில்வே சோதனை ஓட்டம் தொடங்கியது. சோதனை ஓட்டம் மாலை 6.10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து தொடங்கி வள்ளியூர் வரை முதல்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை தென்னக இரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் தொடங்கி வைத்து ரயிலில் பயணம் செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில்வே பாதையின் முதற்கட்ட பணிகள் முடிந்து இன்று விரைவு ரயில் சோதனை இயக்கம் ஆரல்வாய்மொழி முதல் வள்ளியூர் வரையில் வெற்றிகரமாக நடைபெற்றது.. சுமர் 110 மற்றும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த இரட்டை பாதையானது திருநெல்வலி முதல் நாகர்கோவில் வரையிலானதாகும். தற்போது முதற்கட்டமாக ஆரல்வாய்மொழி முதல் வள்ளியூர் வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்புபாதையில் தினசரி செல்லும் ரயில்கள் அனைத்தையும் இயக்கலாம். அதற்கு தகுதி வாய்ந்தது. அடுத்த கட்ட பணிகள் வள்ளியூர் முதல் நாங்குநேரி, நாங்குநேரி முதல் மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் வரை அடுத்த 4 கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெறும்.
இப்பணிகள் அடுத்த வருடம் 2023 இறுதியில் முடிவடையும். வள்ளியூரில் அனைத்து ரயில்கள் நின்று செல்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு, ஏதாவது முக்கியமான ரயில்கள் மட்டும் நின்று செல்வதற்கு தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu