கூடங்குளம் 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்
X
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் மூன்றாவது, நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது அணு உலை கடந்த நவம்பர் மாதம் இருபத்தி நான்காம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மதியம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவது அணு உலை தொடர்ந்து ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.

Tags

Next Story