நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி

நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி
X
உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

உவரியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து உவரியில், உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழாவையொட்டி கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், திரளான பெண்கள், பயிற்சி பெறும் மாணவிகளும், மாணவர்களும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டியில், பெண்களுக்கான அதிர்ஷ்ட பரிசு குலுக்கலும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க்கான பரிசுகளை, உவரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வழங்கினார். ஏற்பாடுகளை எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி தலைமையில் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!